உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதர் மண்டியுள்ள அரசு பள்ளி மைதானம்

புதர் மண்டியுள்ள அரசு பள்ளி மைதானம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புற்கள், செடிகள் வளர்ந்து புதர் மண்டியிருப்பதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் காக்கூர், ஏனாதி, கீழக்காஞ்சிரங்குளம், இளஞ்செம்பூர், சித்திரங்குடி, மேலச்சாக்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி மற்றும் மைதானத்தை சுற்றி கால்நடைகள் நுழையாமல் இருக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது பள்ளி மைதானம் பராமரிக்கப்படாததால் புற்கள், செடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இதனால் விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறும் அவலநிலை உள்ளது. உடற்கல்வி பாடப்பிரிவு போது கூட மாணவர்கள் மைதானத்தில் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். அரசு பள்ளியில் மைதானம் வசதி இருந்தும் முறையாக பராமரிக்காததால் வீணாகி வருகிறது. எனவே மாணவர்களை நலன்கருதி பள்ளி மைதானத்தை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை