உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில சிலம்பம் போட்டியில்  அரசுப்பள்ளி மாணவி வெற்றி

மாநில சிலம்பம் போட்டியில்  அரசுப்பள்ளி மாணவி வெற்றி

ராமநாதபுரம், - -ராமநாதபுரம் காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காஜல்சோபியா மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வென்றுள்ளார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்வர்கள் பங்கேற்றனர்.போட்டியில் 10,12,14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஒற்றை, இரட்டை கம்பு போட்டிகள் நடந்தது.12 வயதிற்குட்பட்டோருக்கான ஒற்றை கம்பு போட்டியில் ராமநாதபுரம் அருகே காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காஜல்சோபியா 11, முதல் பரிசினை வென்று கோப்பையை பெற்றார். மாணவியை பள்ளியின் உதவி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, வகுப்பு ஆசிரியை நர்மதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை