உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜன.,26ல் கிராம சபை கூட்டம்

ஜன.,26ல் கிராம சபை கூட்டம்

திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளில் குடியரசு தின விழா கிராம சபை கூட்டம் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜன.26ல் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பி.டி.ஓ. (ஊராட்சி) சந்திரமோகன் கூறியதாவது:திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறும். கூட்டம் நடத்துவது குறித்த வழிகாட்டுதல்கள் ஊராட்சி செயலர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 16 முதல் 20 தீர்மானங்கள் வரை நிறைவேற்ற அறிவுறுத்தபட்டுள்ளது.கிராம மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அடிப்படை தேவைகள் குறித்து கருத்துகளை தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை