மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
பரமக்குடி : பரமக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டப்படாமல் உள்ள நிலையில் 35 ஆண்டுகளாக வாடகை கொடுக்கும் நிலை உள்ளது.பரமக்குடி- இளையான்குடி ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகில் அஞ்சலகத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை தபால் தந்தி அலுவலகம் இணைந்து செயல்பட்டு வந்தது.கட்டடம் சேதமடைந்ததால் அஞ்சலகத்திற்காக சொந்த கட்டடம் இன்றி மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டது. தற்போது 20 ஆண்டுகளாக பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.ஒவ்வொரு முறை கட்டடத்தை மாற்றும் போதும் ஆவணங்களை பாதுகாப்பதில் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். பரமக்குடி நகராட்சி மக்கள் தொகையை கருத்தில் கொண்டு சிறு சேமிப்பு, வங்கி சேவை உட்பட ஏராளமான வசதிகள் மேம்படுத்த அஞ்சலகம் முன்வந்துள்ளது. ஆனால் இட வசதியை கருத்தில் கொண்டு எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சொந்த கட்டடத்தில் ஒவ்வொரு முறையும் கட்டடம் கட்ட அதிகாரிகள் பார்த்துச் செல்லும் சூழலில் அப்படியே கிடப்பில் போடப்படுகிறது.இந்நிலையில் நவாஸ்கனி எம்.பி., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தலைமை அஞ்சலகம் கட்ட உறுதி ஏற்று செயல்பட வேண்டும்.மேலும் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இச்சூழலில் 35 ஆண்டுகளாக பல லட்சம் வாடகை பணம் அரசுக்கு வீணாகி வருகிறது. ஆகவே சொந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கட்டடம் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago