உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் மோடி அரசின் சாதனை விளக்க வாகனம் புகார் பெட்டியுடன் வலம்

ராமேஸ்வரத்தில் மோடி அரசின் சாதனை விளக்க வாகனம் புகார் பெட்டியுடன் வலம்

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி அரசின் சாதனை விளக்க பிரசார வாகனம் புகார் பெட்டியுடன் வலம் வந்தது மக்களிடம் வரவேற்பை பெற்றது.பிரதமர் மோடி 3-வது முறை பிரதமராகும் வாய்ப்பு உள்ளது என பத்திரிகை கருத்துக் கணிப்புகள் தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கணிசமான தொகுதியில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற பிரதமர் மோடி தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்து செய்கிறார். இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியின் சாதனையை மக்களிடம் எடுத்துரைக்க பிரசார வாகனத்தை தமிழக பா.ஜ., ஏற்பாடு செய்தது. இந்த வாகனம் ராமேஸ்வரத்தில் பஸ் ஸ்டாண்ட், ராமர் தீர்த்தம், புது ரோடு, தனுஷ்கோடி, சேராங்கோட்டை, கரையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மோடியின் சாதனைகள் குறித்த குறும் படங்களுடன் திரையில் ஒளிபரப்பினர்.மேலும் இந்த வாகனத்தில் மக்கள் தங்கள் பகுதி குறைகள், நிறைவேற்றாத திட்டங்கள் குறித்து புகார் மனுவை பெட்டியில் போடலாம் என பா.ஜ., வினர் தெரிவித்தனர். புகார் பெட்டியுடன் பிரசார வாகனம் மக்களிடம் விழிப்புணர்வும், வரவேற்பும் பெற்றது. இதே போல் சாதனைகள், திட்டங்கள் நிறைவேற்றியது குறித்து நாம் யாரை பின்பற்றி பிரசாரம் செய்வது என தெரியாமல் தி.மு.க., வினர் குழப்பத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை