உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.1.20 கோடியில் தனுஷ்கோடியில் மரப்பாலம் வீணாகும் அவலம்

ரூ.1.20 கோடியில் தனுஷ்கோடியில் மரப்பாலம் வீணாகும் அவலம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வனத்துறை சார்பில் ரூ.1.20 கோடியில் அமைக்கப்பட்ட மரப்பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்பாடின்றி வீணாகிப் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.புனிதம், சுற்றுலாத் தலமான ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்குஓராண்டில் சராசரியாக 1.50 கோடி பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடல் பகுதியில் நீர்பிடிப்பு பகுதியில் மழை காலத்தில் தேங்கும் நீரில் குளிர் சீசனை அனுபவிக்க வெளிநாட்டு பறவைகள் குவிகின்றன. இந்த பறவைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக தமிழக அரசு வனத்துறையினர் ரூ.1.20 கோடியில் மரப்பாலம் அமைத்துள்ளனர்.*வீணாகும் அவலம் :இங்கு 100 மீ., நீளத்தில் இப்பாலம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்பாடின்றி முடங்கி கிடக்கிறது. தற்போது தண்ணீர் இன்றி இப்பகுதி முழுவதும் வறண்டுள்ளதால் பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.இங்கு பெய்யும் மழையால் டிச., முதல் ஜன., வரை மட்டுமே தண்ணீர் தேங்கும். இதிலும் ஒரு கி. மீ.,க்கும் அதிக தொலைவில் தான் பறவைகள் வந்து குவியும். இவற்றை சுற்றுலாப் பயணிகள் டெலஸ்கோப் மூலம் மட்டுமே கண்டு ரசிக்க முடியும். ஓராண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே தேங்கும் நீரில் 2 மாதம் மட்டுமே இங்கு ஓய்வெடுக்கும் பறவைகளை சுற்றுலாப் பயணிகள் 40 முதல் 60 நாட்கள் மட்டுமே கண்டு ரசிக்க முடியும். மீதமுள்ள 10 மாதங்களிலும் இப்பாலம் பயன்பாடின்றி இருக்கும். ஓராண்டில் 2 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த கூடிய இந்த பாலத்திற்கு ரூ.1.20 கோடி செலவிட்டு மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி உள்ளதாக சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை