உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேறும் சகதியுமான அரசு மருத்துவமனை நுழைவு வாயில்

சேறும் சகதியுமான அரசு மருத்துவமனை நுழைவு வாயில்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் லேசான மழை பெய்தாலே ரோடு சேறும் சகதியுமாக மாறுவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ள ஆர்.எஸ்.மங்கலத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் லேசான மழை பெய்தாலே வழி முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக மழை பெய்யும் நேரங்களில் முகப்பு பகுதி சேறும் சகதியுமாக மாறுவது தொடர் கதையாக உள்ளது. இதனை சீரமைக்க பலமுறை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியும் நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முதியவர்கள சிரமம் அடைவதுடன் அவசர ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் சென்றுவர சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை