| ADDED : ஜன 17, 2024 12:28 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வெளியூர் பயணிகள், கிராம மக்கள் அதிகளவில் வந்துசெல்லும் பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, அரண்மனை உள்ளிட்ட இடங்களில் சில ஓட்டல்களில் விலைப்பட்டியல் இல்லாததால் கூடுதல் விலைக்கு வாங்கி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், உத்தரகோச மங்கை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். ஓட்டல்களின் தரத்திற்கு ஏற்றவாறு உணவுவகைகளுக்கு விலை நிர்ணயம் செய்கின்றனர். இதுதொடர்பாக சில ஓட்டல்களில் விலைப்பட்டியல் வைப்பது இல்லை, இதனால் சாப்பிட்ட பிறகு பணம் தரும்போது வெளியூர் மக்களுக்கும் ஓட்டல் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. போதுமான அடிப்படை வசதி கூட இல்லாத ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இப்பிரச்னை தீர்வுகாணும் வகையில் விலைப்பட்டியல் வைக்காத ஓட்டல்கள் மீது தொழிலாளர்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-------