உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உறுப்பு தானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உறுப்பு தானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

கமுதி: -கமுதி அருகே வல்லந்தையை சேர்ந்த முத்துக்குமார் டூவீலர் விபத்தில் உயிரிழந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் இளைஞர் முத்துக்குமார் உடல் அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.கமுதி அருகே வல்லந்தையை சேர்ந்த திருப்பதி மகன் முத்துக்குமார் 37. விவசாயம் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு டூவீலரில் அபிராமம் நோக்கி சென்ற போது எதிர்பாராமல் கீழே விழுந்தார். பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். அப்போது உறவினர்கள் அனுமதியுடன் இளைஞர் முத்துக்குமாரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதைடுத்து கமுதி அருகே வல்லந்தை கிராமத்தில் இளைஞர் முத்துக்குமார் உடலுக்கு பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் தலைமையில் கமுதி தாசில்தார் சேதுராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். பின்பு போலீசார் 21 குண்டுகள் முழங்க முத்துக்குமார் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முத்துகுமாருக்கு திருமணமாகி மனைவி பிரியா 25, மணிகண்டன் 5, மித்திரன் 2, ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி