உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கிராமத்திற்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் அச்சம்

 கிராமத்திற்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் அச்சம்

தொண்டி: தொண்டி அருகே கடல் நீர் மட்டம் உயர்ந்து, புதுக்குடி கிராமத்திற்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரை ஓரம் அமைந்துள்ளது புதுக்குடி கிராமம். இங்கு நேற்று காலை திடீரென கடல் நீர் மட்டம் உயர்ந்து கிராமத்திற்குள் நீர் புகுந்தது. கிராமத்தினர் கூறியதாவது: தொண்டி கடலில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சில நாட்களாக கடல் நீர் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக உள்ளது. நேற்று காலை, 6:00 மணிக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்து கிராமத்திற்குள் புகுந்தது. கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகளை கடல் நீர் சூழ்ந்தது. பதற்றமடைந்த மீனவர்கள் படகுகளை கரையேற்றினர். ஆண்டுதோறும் இம்மாதத்தில் கடல் நீர் மட்டம் வழக்கமாக உயரும். இதற்கு வாங்கல் வெள்ளம் என்ற பெயர் உண்டு. கடல் பெருக்கு ஏற்படும் போது இதுபோன்ற மாற்றங்கள் நடக்கும். நேற்று 100 அடி வரை கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்தது. சில மணி நேரங்களில் வடிய துவங்கியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை