மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
6 hour(s) ago
விழிப்புணர்வு
10 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
10 hour(s) ago
கண்மாய் நீர் பாய்ச்சுதல்
10 hour(s) ago
கடலாடி : -கடலாடி தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல், மக்கள் சிரமப்படுகின்றனர். கோடைகாலத்தில் குடிநீர் தொட்டி வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.கடலாடி தாலுகாவில் 42 வருவாய் கிராமங்கள் உள்ளன.சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அலுவலகத்திற்கு வரும்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் வசதி இல்லாததால் அருகே உள்ள கடைகளுக்கு சென்று குடிநீர் பாட்டில்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.சாயல்குடி அண்ணாநகர் பாஸ்கரன் கூறியதாவது: தாலுகாக அலுவலகத்தில் கோடைகாலத்தில் கூட குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறை வசதி இருந்தும் முறையான தண்ணீர் வசதி இல்லாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கடலாடி தாலுகா நிர்வாகத்தினர் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவும், கழிப்பறை வசதியை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
6 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago