உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  திருப்புல்லாணியில் போக்குவரத்து நெரிசல் கண்டு கொள்ளாத போலீசார்

 திருப்புல்லாணியில் போக்குவரத்து நெரிசல் கண்டு கொள்ளாத போலீசார்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி கிழக்கு ரத வீதியில் காலை, மாலை நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரெகுநாதபுரம், பெரியபட்டினம், வண்ணாங்குண்டு, தினைக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக திருப்புல்லாணியில் இருந்து ராணி மங்கம்மாள் சாலை செல்கிறது. இதனருகே தெற்கு பகுதியில் சேதுக்கரை செல்வதற்கான பிரதான சாலை செல்கிறது. இந்நிலையில் காலை, மாலை நேரங்களில் அங்குள்ள கடைகள் முன்பு அதிகளவு டூவீலர்களை வரிசையாக நிறுத்திச் செல்லும் போக்கு தொடர்கிறது. பொதுமக்கள் கூறியதாவது: திருப்புல்லாணி கிழக்கு ரத வீதியில் ராணி மங்கம்மாள் சாலை மற்றும் சேதுக்கரை செல்லும் சாலையில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி வருகிறது. இதனால் அரசு டவுன் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. காலை, மாலை இரவு நேரங்களில் திருப்புல்லாணி போலீசார் அவ்விடத்தில் நின்று போக்குவரத்தை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகமாகச் செல்லும் வாகனங்களால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் சாலையோர வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்கவும் திருப்புல்லாணி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை