உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமர் பிரதிஷ்டை விழா திரையில் ஒளிபரப்பு

ராமர் பிரதிஷ்டை விழா திரையில் ஒளிபரப்பு

ராமநாதபுரம்: -அயோத்தி ராமர் கோயிலில் நடந்த ராமர் பிரதிஷ்டை விழா டிஜிட்டல் திரையில் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள ராணி மகாலில் நடந்த விழாவில் மதுரை ஆதினம், பா.ஜ., சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் திருமாறன், பா.ஜ., மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், பார்லிமென்ட் தொகுதி பொறுப்பாளர் நாகேந்திரன், பார்வையாளர் முரளிதரன், ராமநாதபுரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ரஞ்சனா நாச்சியார் உட்பட கட்சியினர் பங்கேற்றனர்.இதில் அயோத்தியில் நடந்த விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடியின் பேச்சை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தனர்.பின் கோதண்டராமர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமரின் படங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ