உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மறைமாவட்ட ஆயர் ஆய்வு

மறைமாவட்ட ஆயர் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கிற்க்கு உட்பட்ட பூலாங்குடி, எட்டியத்திடல் அடைக்கல மாதா ஆலயங்கள், செலுகனேந்தல் அருளானந்தர் ஆலயம்,செபஸ்தியார்புரம் செபஸ்தியார் ஆலயம் ஆகியவற்றிற்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் ஆய்வு மேற்கொண்டார்.செங்குடி கிராம பொறுப்பாளர்கள் அருள் சூசை, மிக்கேல்மாறன், மிக்கேல்ராஜ், ஊராட்சிமன்ற தலைவர் சூசை, செங்குடி பங்குத்தந்தை வின்சென்ட் டி ராஜன் உட்பட இளைஞர் மன்றம், மகளிர் மன்றத்தினர் வரவேற்றனர். ஆலய பங்கிற்க்கு உட்பட்ட 110 மாணவர்களுக்கு உறுதி பூசுதல் நிகழ்வு நடத்தப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அதிபர் ஜெயபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை