மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
14 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
14 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
14 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
14 hour(s) ago
ராமநாதபுரம்:வழுதூர் இயற்கை எரிவாயு சுழலி மின்நிலையத்தின் இரண்டாவது யூனிட் பழுதான நிலையில், அதை சரி பார்க்க இத்தாலியிலிருந்து அன்சால்டா குழுவினர் வராததால், இமெயில் மூலம் சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளனர். வழுதூரில் இயற்கை எரிவாயு சுழலி மின்நிலையம் இரண்டாவது யூனிட்டில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காஸ் எரிந்து வெளியாகும் வெப்பம் 600 டிகிரியை விட அதிக அளவில் வந்தது. அந்த வெப்பம் செல்லும் குழாய்கள் உருகும் நிலை ஏற்பட்டதால் யூனிட் தானாக நின்றது. பழுதை சரிசெய்ய இத்தாலியின் 'அன்சால்டா' நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 'அன்சால்டா' குழுவினர் என்ன பிரச்னைகள் என்பதை கேட்டறிந்து, இமெயில் மூலம் பதிலளித்துள்ளனர். மேலும் போன் மூலமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு, யூனிட்டை செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago