உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை கடலில் அபாய படகு சவாரி

கீழக்கரை கடலில் அபாய படகு சவாரி

கீழக்கரை:கீழக்கரை கடலில் மீன்பிடி படகுகளில் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் விதி மீறி மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். கடந்தாண்டு டிச.27ல் பெரியபட்டினம் கடல் பகுதியில் உள்ள தீவுக்கு உல்லாச பயணம் சென்ற போது 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பின், சில மாதங்களாக மீன்பிடி படகுகளில் பயணிகளை ஏற்றிச் செல்வது நிறுத்தப்பட்டது. தற்போது மீன்பாடு குறைவு காரணமாக படகுகளில் பயணிகளை ஏற்றிச் செல்வது மீண்டும் துவங்கியுள்ளது.மீன்பிடி படகில் பயணிகளை ஏற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும்,என மீன்வளத் துறையினர், போலீசார் எச்சரித்தாலும் மீனவர்கள் கண்டு கொள்ளவில்லை. கீழக்கரை கடலில் நாட்டுப்படகில் எவ்வித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல், பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. மீண்டும் உயிர்பலி ஏற்படும் முன், இந்த விதிமீறலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ