உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம்

ராமேஸ்வரம்:இலங்கையில் சிறை தண்டனை பெற்ற ஐந்து மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்., 17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிப்., 20ல் 15 கி.மீ., நடைபயணத்தில் ஈடுபட்டனர். மேலும் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவை புறக்கணித்தனர்.நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம் துவக்கினர். பிப்., 16ல் மீனவர் ராபர்ட்டுக்கு இலங்கை நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது. அன்று முதல் அவரது மனைவி கிரேஸி, 36, சரியாக சாப்பிடாமல் மன வேதனையில் இருந்தார். நேற்று உண்ணாவிரத பந்தலில் கிரேஸி மயக்கம் அடைந்தார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை