உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் பல்லிகள்

 மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் பல்லிகள்

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகத்திற்குட்பட்ட கடல் பகுதிகளில், விஷமில்லாத அரிய வகை கடல் பல்லிகள் த ங்கள் வாழ்விடங்களாக கொண்டுள்ளன. மன்னார் வளைகுடாவில் காணப்படும் கடல் பல்லிகள், தனித்துவமானவை, அமைதியானவை. அவற்றில் விஷம் கிடையாது. நீண்ட கொத்தவரங்காயை போல, 10 முதல் 15 செ.மீ., நீளத்திற்கு காணப்படும். பெரும்பாலும் பசுமை மற்றும் பழுப்பு நிறங்களில் டோகோங் இன கடல் பல்லிகள் காணப்படுகின்றன. பவளப்பாறைகள் மற்றும் கடல்புல் படுகையில் கடல் பல்லிகள் அதிகமாக காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கடல் புற்கள், கடற்பாசிகள் மற்றும் சிறிய நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன. கடல்வாழ் தாவரங்களை முதன்மையாக உண்ணும் விலங்காகும். கடல் உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. 20 முதல் 50 எண்ணிக்கையில் ஆண்டிற்கு ஒருமுறை முட்டையிட்டு பவளப்பாறைகளுக்கு இடையில் உள்ள பகுதிகளில் குஞ்சு பொரித்து அவற்றில் இருந்து வெளியேறுகின்றன. மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை வளர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. கடல் பல்லிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பவை சுருக்குமடி மீன்பிடித்தல் மற்றும் இழுவை மடி மீன்பிடித்தல் ஆகும். கடலில் கழிவுநீர் கலத்தல் உள்ளிட்டவை மூலமாகவும் கடல் வளம் பாதிக்கப்படும் போதும், எண்ணிக்கை வெகுவாக குறைகின்றன. கடல் பல்லியை டால்பின், சுறா உள்ளிட்ட பெரிய ரக மீன்களும், கடல் பறவைகளும் உணவாக உட்கொள்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்