உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உச்சிநத்தம் கிராமத்தில் சாலை சேதம் பத்தாண்டாக பஸ் வரத்து இல்லை; காற்றில் பறக்கும் தேர்தல் வாக்குறுதி

உச்சிநத்தம் கிராமத்தில் சாலை சேதம் பத்தாண்டாக பஸ் வரத்து இல்லை; காற்றில் பறக்கும் தேர்தல் வாக்குறுதி

சாயல்குடி: கடலாடி ஒன்றியம் எஸ்.தரைக்குடி அருகே வி.சேதுராஜபுரம், அன்னபூவன் நாயக்கன்பட்டி, முத்துராமலிங்கபுரம், வெள்ளையாபுரம், கரிசல்குளம், செஞ்சடைநாதபுரம், பிச்சையாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பஸ் வசதி இல்லாத நிலை தொடர்கிறது. பா.ஜ., அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் முத்து வல்லாயுதம் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ் வசதி இல்லை. மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதி கிராமமான வி.சேதுராஜபுரத்தில் இருந்து பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இதுவரை பஸ் வசதி செய்து தரப்படவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளம், லட்சுமிபுரம் வழியாக திருநெல்வேலி கோட்டத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. பின்னர் சாலை சேதத்தால் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வி.சேதுராஜபுரத்தில் இருந்து அருகில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கானல் நீராகவே உள்ளது. இதனால் மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகளுக்கு மற்றும் அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு தனியார் வாடகை வாகனங்களில் பயணிக்கும் நிலை தொடர்கிறது. எனவே சாயல்குடியில் இருந்து எஸ். தரைக்குடி மார்க்கமாக கிராமங்களுக்கு செல்வதற்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியினர் தரக்கூடிய வாக்குறுதி செயல்படுத்தப் படவில்லை. எனவே கும்பகோணம் போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். அதற்கு முன் சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை