மேலும் செய்திகள்
கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
4 minutes ago
த.வெ.க., பூத்கமிட்டி கூட்டம்
09-Dec-2025
நம்பியான் வலசையில் கும்பாபிஷேகம்
09-Dec-2025
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2025 நவ.,20ல் ஒருவர் தனது தாய் பெயரில் இடத்தை கிரயம் செய்துள்ளார். அதற்காக பட்டா மாறுதல் செய்வதற்கு விண்ணப்பித்தவர், பரமக்குடி அருகே வேந்தோணி கிராம வி.ஏ.ஓ., கருப்புசாமியை சந்தித்து பேசினார். அதற்கு கருப்புசாமி தனக்கு இன்னும் ஆவணம் வரவில்லை எனக்கூறி பிறகு அலைபேசியில் அழைப்பதாக தெரிவித்து அனுப்பியுள்ளார். பின்னர் பட்டா பெயர் மாறுதலாகிவிட்டதாக கூறிய கருப்புசாமி, தான் பரிந்துரை செய்ததால் தான் உங்கள் அம்மா பெயரில் பட்டா வந்துள்ளது. ஆகவே ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். புகார்தாரர் மறுத்ததால் ரூ.2000 குறைத்து ரூ.13 ஆயிரம் தருமாறு பிடிவாதமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.13 ஆயிரத்தை நேற்று காலை அந்த நபர் கருப்புசாமியிடம் கொடுத்தார். வி.ஏ.ஓ.,வை மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர்.
4 minutes ago
09-Dec-2025
09-Dec-2025