உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கத்தியால் கையை கிழித்துக்கொண்ட எஸ்.ஐ.ஆர்., பணி உதவியாளர்

 கத்தியால் கையை கிழித்துக்கொண்ட எஸ்.ஐ.ஆர்., பணி உதவியாளர்

இளையான்குடி: இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பிரிவு உதவியாளர் பணிச்சுமை காரணமாக கத்தியால் கைகளை அறுத்துக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகவதிராஜா 37. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் பொது பிரிவில் பணிபுரிகிறார். 15 நாட்களுக்கு முன்பு எஸ்.ஐ.,ஆர்., பணிக்காக தேர்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அப்போதே பகவதி ராஜா தேர்தல் பிரிவில் பணி செய்வதற்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த போது அங்கிருந்த சிறிய கத்தியால் தனது கைகளை அறுத்துக் கொண்டார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்