உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு: மாணவர்கள் ஓட்டம்

வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு: மாணவர்கள் ஓட்டம்

திருவாடானை : அரசு தொடக்கபள்ளிக்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்காலன்வயல் கிராமத்தில் அரசு தொடக்கபள்ளி உள்ளது. 18 மாணவர்கள் படிக்கின்றனர்.இரு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.நேற்று மதியம் 3:00 மணிக்கு பள்ளி வகுப்பறை நடந்து கொண்டிருந்த போது சாரை பாம்பு புகுந்தது. அதை கவனித்த மாணவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.திருவாடானை தீயணைப்புநிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் சென்ற வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்து காட்டுபகுதியில் விட்டனர். பள்ளியை சுற்றிலும் சீமைகருவேல மரங்கள் அடர்ந்த முட்புதர்கள் உள்ளது. பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் வசிக்கும் இடமாக உள்ளது. அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை