உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி பகுதியில் மருந்து தெளித்தல் தீவிரம்

கமுதி பகுதியில் மருந்து தெளித்தல் தீவிரம்

கமுதி: கமுதி வட்டாரத்தில் விவசாயிகள் உரமிடுதல், மருந்து தெளித்தல் பணியில் ஈடுபட்டனர். பேரையூர், பசும்பொன், கருங்குளம், கோட்டைமேடு, புதுக்கோட்டை, கோவிலாங்குளம், கீழராமநதி, செங்கப்படை உட்பட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிலங்கள் உழவு செய்யப்பட்டு நெல் விதைத்துள்ளனர். தற்போது பயிர்கள் முளைக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்தது. வயலில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் கமுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வயலில் தண்ணீர் தேங்கி இருப்பதால் களை எடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர். கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை