உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவி பலாத்கார வழக்கு மார்ச் 1 க்கு தள்ளி வைப்பு

மாணவி பலாத்கார வழக்கு மார்ச் 1 க்கு தள்ளி வைப்பு

ராமநாதபுரம், : -பரமக்குடியை சேர்ந்த மாணவி பலாத்கார வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மகிளா நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதனை உயர்நீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட அன்னலட்சுமி, உமா, கயல்விழி ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிகாமணி உள்பட 5 பேரும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை மார்ச் 1க்கு தள்ளி வைத்தார்.-----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை