உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள் அரசு நிதி வீணடிப்பை தவிர்க்கலாம்

 ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள் அரசு நிதி வீணடிப்பை தவிர்க்கலாம்

கடலாடி: கடலாடி, திருப்புல்லாணி, மண்டபம் உள்ளிட்ட யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சாலையோரங்களில் அதிகளவு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சிகளில் நிர்வகிக்கப்படும் கம்பங்களில் மின்விளக்கு, சாலை பராமரிப்பு, குடிநீர், துாய்மைப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு எஸ்.எப்.சி., எனப்படும் சிறப்பு நிதி ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு அவற்றின் மூலமாக நிர்வாக செலவினங்களுக்கு இயக்கப்படுகிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது: அரசின் சிறப்பு திட்டம் என்று கூறி தேவையில்லாத இடங்களில் அதிகளவு வாறுகால் பணி, மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நீர் சேகரிப்பு தொட்டி, உறிஞ்சி குழாய் திட்டம் உள்ளிட்டவைகளுக்காக பல லட்சங்களில் திட்டமிட்டு பணிகளை செய்கின்றனர்.இவற்றால் பெரும்பாலும் பயனில்லை. பொதுமக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் தன்னிச்சையாக செய்வதால் அரசு நிதி பெரிய அளவில் வீணடிக்கப்படுகிறது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள சாலை வசதி, குடிநீர், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றுதல், குப்பை உடனுக்குடன் அகற்றுதல் இவற்றில் கவனம் செலுத்துவதற்கு உரிய வழிகாட்டுதலை செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஊராட்சிகளின் சாதனை என்ற பெயரில் பல இடங்களில் விளம்பர போர்டுகளை கட்டுமானமாக நிறுவுகின்றனர். அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை