உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவருக்கு பாரத ரத்னா விருது தமிழக அரசு முன்மொழியும் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தேவருக்கு பாரத ரத்னா விருது தமிழக அரசு முன்மொழியும் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

கமுதி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு முன்மொழியும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருணாநிதி ஆட்சியில் தேவர் சமுதாயத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க., ஆட்சியில் இருந்த போது நினைவிடம் முன்பு அணையா விளக்கு அமைக்கப்பட்டது. நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. முளைப்பாரி மண்டபம், தேவர் வாழ்ந்த வீடு பராமரிப்பு, ரூ.2 கோடியே 5 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தேவர் பெயரில் கல்லுாரிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி. தேவர் நினைவிடம் முன்பு கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட முத்துராமலிங்கதேவர் அரங்கத்தை நான் திறந்து வைத்தேன். தேவர் பிறக்கும் போதும் வீரர், வாழும் போதும் வீரர், இறந்த போதும் வீரர், மறைவுக்குப் பிறகு வீரராக போற்றப்படுகிறார். மக்களின் கோரிக்கையை ஏற்று பசும்பொன்னில் தேவர் பெயரில் ரூ.3 கோடியில் புதிய திருமண மண்டபம் விரைவில் கட்டப்படும். கமுதி தேவர் நினைவு கல்லுாரிக்கு நிர்வாகக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்போம். தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தால் தமிழக அரசும் முன்மொழியும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை