மேலும் செய்திகள்
பட்டா மாறுதலுக்கு ரூ.13 ஆயிரம்: வி.ஏ.ஓ., கைது
5 minutes ago
த.வெ.க., பூத்கமிட்டி கூட்டம்
09-Dec-2025
நம்பியான் வலசையில் கும்பாபிஷேகம்
09-Dec-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். தமிழகத்தில் 2009 ஜூன் 1 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370, அதன் பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வேறு வேறு அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021ல் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 5 ஆண்டு கால ஆட்சி முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணி புரிகின்றனர். அடுத்தக்கட்டமாக டிச.,24 முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
5 minutes ago
09-Dec-2025
09-Dec-2025