உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடிப்படை வசதிக்கு ஏங்கும் சொக்காணை ஊராட்சி மக்கள் சேதமடைந்த பயணியர் நிழற்குடை

அடிப்படை வசதிக்கு ஏங்கும் சொக்காணை ஊராட்சி மக்கள் சேதமடைந்த பயணியர் நிழற்குடை

சிக்கல்: சிக்கல் அருகே சொக்காணை ஊராட்சியில் சொக்காணை மற்றும் வல்லக்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கு ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் நிலையில் அடிப்படை வசதிகள் இல்லை. பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளது.ஊராட்சியின் நான்கு புறங்களிலும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. சிக்கலில் இருந்து 7 கி.மீ.,ல் வல்லக்குளம் உள்ளது. இங்கு 1994ல் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது சேதமடைந்த நிலையில் பயன்பாடின்றி உள்ளது.பஸ்சிற்காக காத்திருப்போர் பயணியர் நிழற்குடை பக்கம் செல்ல அச்சப்பட்டு திறந்தவெளியில் நிற்கின்றனர்.வல்லக்குளம் கிராம மக்கள் கூறியதாவது:கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தேரிருவேலி முதல் சிக்கல் வழியாக வல்லக்குளம் செல்லும் இணைப்பு சாலை ஐந்தாண்டுகளுக்கு மேலாக சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். கழிவுநீர் செல்வதற்கு முறையான வாறுகால்வாய் வசதி இல்லாததால் சாலை நடுவிலண கழிவுநீர் செல்கிறது. இதனால் கொசுப்பண்ணைகள் உருவாகி பகலிலும் இரவிலும் கடிக்கிறது. சுகாதார சீர்கேட்டுடன் தெருக்கள் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.ஜல் ஜீவன் மிஷன் இயக்க நிதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.15 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. கடந்த 6 மாதமாக ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய முறையில் தரமாக கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அடிப்படை வசதிகள் வேண்டி வல்லக்குளம் ஜமாத் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி., நவாஸ்கனியிடம் மனுக்கள் அளித்துள்ளோம் என வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை