உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ரூ.2 கோடியில் டவுன் போலீஸ் ஸ்டேஷன்

பரமக்குடியில் ரூ.2 கோடியில் டவுன் போலீஸ் ஸ்டேஷன்

பரமக்குடி: பரமக்குடி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்குரூ.2கோடியே 12 லட்சத்தில் புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பரமக்குடியில் டவுன் ஸ்டேஷன் கீழ் தளத்துடன்மட்டும் இயங்கி வந்த நிலையில், கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் சேதம் அடைந்து வந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் காரணமாக ரூ.2கோடியே 12 லட்சத்தில் 2 தளங்களுடன் நவீன முறையில் புதிய கட்டடம் அமைக்கப்பட உள்ளது. நேற்று மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் பூமி பூஜை செய்து வைத்தார். எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., சபரிநாதன் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், காவல்துறை குடியிருப்பு கார்ப்பரேஷன் உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலை பொறியாளர் செல்லச்சாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை