உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகளை சுற்றுலா அழைக்க வலியுறுத்தல்

விவசாயிகளை சுற்றுலா அழைக்க வலியுறுத்தல்

திருவாடானை, -கோடை காலத்தில் வேளாண் சுற்றுலாவிற்கு விவசாயிகளை அழைத்துசெல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் வேளாண் துறை சுற்றுலாத் திட்டம் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளை வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அங்குள்ள பண்ணைகளில் தங்க வைத்து அவர்களை வேளாண் பணிகளில் ஈடுபடவும், வேளாண் சார்ந்த பணிகள் குறித்து விவசாயிகளுக்கு புரிதல் ஏற்படுத்துவதும் இதன் நோக்கம்.வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். விவசாயிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் செப்., அக்., மாதங்களில் அழைத்து செல்லப்படுவது வழக்கம். விவசாய காலம் என்பதால் விவசாயிகள் அந்த மாதங்களில் செல்ல வாய்ப்பில்லாமல் உள்ளது.தற்போது அறுவடை பணிகள் முடிந்து விட்டதால் மே, ஜூன் மாதங்களில் விவசாயிகளை அழைத்துச் செல்ல வேளாண் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை