உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த கட்டடத்தில் செயல்படும் வாலிநோக்கம் துணை மின் நிலையம் புதிய கட்டடம் 2 ஆண்டாக திறக்கப்படவில்லை

சேதமடைந்த கட்டடத்தில் செயல்படும் வாலிநோக்கம் துணை மின் நிலையம் புதிய கட்டடம் 2 ஆண்டாக திறக்கப்படவில்லை

வாலிநோக்கம்: வாலிநோக்கத்தில் துணை மின் நிலையம் 1995 முதல் இயங்கி வருகிறது. அப்போது கட்டப்பட்ட கட்டடம் இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.வாலிநோக்கம் துணை மின் நிலையத்தின் பழைய கட்டடத்தில் மின் டிரான்ஸ்மீட்டர் மற்றும் எலக்ட்ரிக்கல் தொடர்பான அனைத்து விதமான தளவாடப் பொருட்கள் பாதுகாக்கும் இடமாகவும், பராமரிக்கவும் இவ்வலுவலகம் இயங்கி வருகிறது.இந்நிலையில் கட்டடத்தில் கூரை பூச்சுகள் விரிசல் கண்டு மழை காலங்களில் மழை நீர் உட்புகுகிறது. இதனால் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் மழை நீர் பட்டு தொடர்ந்து சேதமடைகின்றன.கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர் கழிப்பறை வளாகங்கள் முழுவதும் செங்கல் பூச்சுக்கள் வெளியே தெரியுமாறு பாழடைந்த கட்டடம் போல் உள்ளது. இதனால் மின் ஊழியர்கள் அச்சத்துடன் வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் பணிபுரிகின்றனர்.கடந்த 2021ல் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக துணை மின் நிலைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளதால் புதிய கட்டடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. மின் பயனீட்டாளர்கள் கூறியதாவது:சேதமடைந்த வாலிநோக்கம் துணை சுகாதார நிலையத்தால் விபத்து அபாயம் உள்ளது. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் இல்லாததால் திறந்த வெளியாக உள்ளது. இவற்றில் ஆடு, மாடுகள் மேய்கிறது.உயரழுத்த திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் அருகே செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. எனவே புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டவும் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை