உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராம உதவியாளர் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர் ஆர்ப்பாட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு பதவி உயர்வு வேண்டியும், இரண்டு பணியிடங்களுக்கு ஒரு பணியிடம் வழங்கியதை கண்டித்தும் தமிழக அரசின் உத்தரவின்படி கிராம உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டியும், மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அரசாணையை செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ், மாவட்டத் தலைவர் வெள்ளத்துரை, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார், செயலாளர் ஜமால் முகமது, பொருளாளர் செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ