உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மனைவி கொலை : கணவர் சரண்

 மனைவி கொலை : கணவர் சரண்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தகாத உறவில் ஈடுபட்ட மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார். பரமக்குடி வசந்தம் நகரை சேர்ந்தவர் செல்வா. இவரது மனைவி கஸ்துாரி 48. இவர்களுக்கு குழந்தை இல்லை. செல்வாவின் நண்பர் கார்மேகம் 65. இவரது மனைவி 2014ல் உயிரிழந்தார். இதனால் கஸ்துாரியுடன் கார்மேகத்திற்கு தொடர்பு ஏற்பட்டது. 2020ல் கொரோனா பாதித்து செல்வா இறந்தார். இருவரும் ராமேஸ்வரத்தில் சவுந்தரிஅம்மன் கோவில் தெருவில் கணவன் மனைவியாக வாடகை வீட்டில் தங்கினர். இந்நிலையில் நேற்று கஸ்துாரியை கார்மேகம் கத்தியால் வயிற்றில் குத்திக் கொலை செய்து விட்டு ராமேஸ்வரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். 'கடந்த இரு ஆண்டுகளாக மனைவி கஸ்துாரி ராமேஸ்வரத்தை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டார். பலமுறை கண்டித்தும் பயனில்லை. இதனால் ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்ததாக' கார்மேகம் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கார்மேகத்தை இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா கைது செய்து சிறையில் அடைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்