உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சோளப்பயிரை அழித்த காட்டுப்பன்றிகள்

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சோளப்பயிரை அழித்த காட்டுப்பன்றிகள்

கமுதி ; கமுடி அருகே கோவிலாங்குளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சோளப்பயிர்களை காட்டுப்பன்றிகள்​சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கமுதி தாலுகாவில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்துள்ளனர். கமுதி அருகே கோவிலாங்குளம் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். பருவமழை காலத்தில் அதிக மழை பெய்ததால் கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் முழுமையாக தேங்கியுள்ளது. சிறுதானியப் பயிர்களும் நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. தற்போது சோளப்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளது. கோவிலாங்குளம் விவசாயி ஜோதிராமர் கூறியதாவது:கோவிலாங்குளம் அருகே கிராமங்களில் 1000 ஏக்கருக்கு அதிகமாக சோளம் விவசாயம் செய்துள்ளனர். மழை பெய்ததால் சோளப்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இச்சூழ்நிலையில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தின.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வலைகள் அமைத்து இருந்தும் சேதப்படுத்தியுள்ளன. இதனால் ஏராளமானோர்​ விவசாயத்தை கைவிட்டுள்ளனர். வனத்துறை, மாவட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் விவசாயத்தை கைவிடும் சூழ்நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்து காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை