| ADDED : ஆக 20, 2024 03:16 AM
சேலம்: சேலம், ஐந்து ரோடு ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த திருநங்கை கனிஷ்கா, 24. இவர் நேற்று முன்தினம் புதிய பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த இருவர் கனிஷ்காவிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின், அவரை காரில் ஏற்றிக்கொண்டு பெங்களூரு பைபாஸ் சாலை சென்றனர். அப்போது, அரசு பொறியல் கல்லுாரி காபி பார் பகுதிக்கு சென்றதும், காரை நிறுத்தி திருநங்கை கனிஷ்காவிடமிருந்து மொபைல்போன், ஆறு கிராம் நகையை இருவரும் பறித்துக் கொண்டு அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு தப்பினர். இது குறித்து கனிஷ்கா அளித்த புகார்படி,, கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.