உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குவாரி பள்ளத்தில் எலக்ட்ரீஷியன் சடலம் மீட்பு

குவாரி பள்ளத்தில் எலக்ட்ரீஷியன் சடலம் மீட்பு

சேலம்: சேலம், அய்யபெருமாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 35. எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, பைக்கில் வெளியே சென்ற கிருஷ்ணன் வீடு திரும்ப-வில்லை. உறவினர்கள் தேடினர். நேற்று காலை அதே பகுதியில் உள்ள பூனைக்கரடு, வெள்ளக்கல் குவாரியில் உள்ள பள்ளத்தில் கிருஷ்ணன் இறந்து கிடந்தார். அவரது பைக் அருகே நிறுத்தப்பட்-டிருந்தது.இதுகுறித்து உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில் கடன் தொல்-லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்-தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை