உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவி, மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மனைவி, மாமியாரை தாக்கிய மருமகன் கைது

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வடக்கு காட்டை சேர்ந்தவர் சுந்தரராஜன், 34. அதே பகுதியை சேர்ந்தவர் நந்தினி, 28. இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்-கின்றனர். மனைவி நந்தினி தன்னை விட்டு பிரிந்ததற்கு காரணம், மாமியார் கல்யாணி தான் என, இருவரிடமும் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சுந்தரராஜன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அருகில் இருந்த இரும்பு கம்பியால் மனைவி நந்-தினி, மாமியார் கல்யாணியை தாக்கியுள்ளார். இதில் இருவ-ருக்கும் கை, கால், எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டனர். இதனால் சுந்தரராஜன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து, வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி