உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 8 மாத பெண் குழந்தை சாவு குறித்து விசாரணை

8 மாத பெண் குழந்தை சாவு குறித்து விசாரணை

மேட்டூர்: மூலக்காட்டில், 8 மாத பெண் குழந்தை இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொளத்துார், மூலக்காடு ஊராட்சி, நேதாஜி நகரை சேர்ந்தவர் திருமுருகன், 28, மனைவி அருணா, 24. தம்பதியருக்கு திருமணமாகி, ஐந்து ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு, 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் அருணாவுக்கு பெண் குழந்தை பிறந்து, 8 மாதம் ஆகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த போது புரை ஏறியதாக தெரிகிறது.குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். குழந்தை உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கொளத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை