உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் நீர்மட்டம் 7 அடி அதிகரிப்பு நீர்வரத்து 76,794 கனஅடியாக உயர்வு

மேட்டூர் நீர்மட்டம் 7 அடி அதிகரிப்பு நீர்வரத்து 76,794 கனஅடியாக உயர்வு

மேட்டூர் : மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 76,794 கனஅடியாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நீர்மட்டம், 7 அடி, நீர்இருப்பு, 6 டி.எம்.சி., உயர்ந்தது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பி-டிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகளுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வந்து நிரம்பி-யது.இதில், நேற்று கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 69,395 கனஅடி உபநீர் காவிரியில் வெளியேற்றப்பட்-டது.நேற்று காலை வினாடிக்கு, 64.033 கனஅடியாக இருந்த நீர்வ-ரத்து மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 76,794 கனஅடியாக அதிகரித்தது. அதற்கேற்ப மேட்டூர் அணை நீர்மட்டம் மளமள-வென உயர்ந்தது.நேற்று முன்தினம் மாலை, 70.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை, 77.36 அடியாகவும், 33.39 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று மாலை, 39.37 டி.எம்.சி.,யாக உயர்ந்-தது.நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம், 7 அடியும், நீர் இருப்பு, 6 டி.எம்.சி.,யும் அதிகரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ