உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1.80 லட்சம் மோசடி புரோக்கர் மீது வழக்கு

ரூ.1.80 லட்சம் மோசடி புரோக்கர் மீது வழக்கு

சேலம்:சேலம், பள்ளப்பட்டியை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் சுந்தர்ராஜன், 60. இவர் ஆட்டோவுக்கு தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை புதுப்பிக்க, செரி ரோட்டை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலக புரோக்கர் அஜி பாய், 33, என்பவரிடம், பல்வேறு தவணைகளாக, 2020 நவ., 18 முதல், கடந்த மாதம் வரை, 1.80 லட்சம் ரூபாய் கொடுத்தார்.பணத்தை பெற்ற அவர், ஆட்டோக்குரிய ஆவணங்களை, அவரது பெயரில் மாற்றிக்கொண்டார். தொடர்ந்து பணத்தையும் தர மறுத்துவிட்டார். இதுகுறித்து சுந்தர்ராஜன், கடந்த வாரம் அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் அஜிபாய் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை