உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டி வீட்டில் ரூ.50 ஆயிரம் மாயம்

மூதாட்டி வீட்டில் ரூ.50 ஆயிரம் மாயம்

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே மூதாட்டி வீட்டில், 50 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் கொண்டலாம்பட்டி அருகே, எஸ்.நாட்டாமங்கலம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த குள்ளம்மாள், 60, தன் வீட்டு பீரோவில், 50 ஆயிரம் ரூபாயை வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி பீரோவில் பணம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் பார்த்தபோது, பணத்தை காணவில்லை. வீட்டுக்குள் வந்த மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.கொண்டலாம்பட்டி போலீசில் குள்ளம்மாள் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். யார் யார் வீட்டுக்கு வந்து சென்றார்கள் என்பது குறித்து, போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி