உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கல்யாணம், சேர்த்தி சேவை, பால் அபிேஷகம் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் கோலாகலம்

கல்யாணம், சேர்த்தி சேவை, பால் அபிேஷகம் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் கோலாகலம்

சேலம்: ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூர திருவிழா, சேலம், அம்மா-பேட்டை சவுந்தரராஜர் கோவிலில் கடந்த, 3ல் தொடங்கியது. தினமும் மாலை, ஆண்டாள் நாச்சியாருக்கு விதவித அலங்கா-ரங்கள் செய்யப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் பாடி சிறப்பு பூஜை நடந்து வந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு ஆண்டாள், சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மணக்கோலத்தில் அலங்கரித்திருந்தனர். சவுந்தரராஜரை, 'ரங்கமன்னாராக' பாவித்து ஆண்டாள் நாச்சியாருடன் பட்டாச்சாரி-யார்கள் மாலை மாற்றி திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்-தனர். அதேபோல் பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் ஆடிப்பூர திருவிழா கடந்த ஜூலை, 28ல் தொடங்கியது. நேற்று வரதராஜருடன் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனம் செய்து சர்வ அலங்காரத்துடன், 'சேர்த்தி சேவை'யில் எழுந்தருள செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரி-சனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பெரியநா-யகி அம்மன், கரபுரநாதர் மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்-பட, 16 வகை பொருட்களால் அபி ேஷகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு புதிதாக செய்யப்பட்ட, 'முத்தங்கி' அணிவித்து வளையல் மாலை, மலர் மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்-டது. மூலவர் கரபுரநாதர், வெள்ளி 'நாகாபரணம்' அணிந்து அருள்பாலித்தார். வீரபாண்டி அங்காளம்மன் கோவிலில் மூலவர், மடியில் குழந்தை பாலமுருகனை அமர்த்திய கோலத்தில் வளையல் மாலை சார்த்தி அருள்பாலித்தார். ஆட்டையாம்பட்டி அருகே மருளையம்பாளையம் மாரியம்மன்; சேலம் அணைமேடு ரேணுகா அம்மன் கோவில் மூலவர், வளையல் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.ஓமலுார் கடை வீதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், 108 லிட்டர் பாலால் அபி ேஷகம் செய்யப்பட்டது. மதியம் உச்-சிகால பூஜையை தொடர்ந்து மாலையில், 1,00,001 வளையல்-களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இடைப்பாடி கவுண்டம்பட்டியில் உள்ள சின்னமாரியம்மன் சுவாமிக்கு சந்தன-காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை