பாலக்கோடு: தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம், மாலை முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்-பட்டி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பரவலாக பெய்தது. பாலக்கோட்டில் மட்டும் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலக்கோட்டில், 142.2 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து மாரண்டஹள்ளி, 55, அரூர், 42.30, பாப்பிரெட்டிப்பட்டி, 35, பென்னாகரம், 30, தர்மபுரி, 15, ஒகேனக்கல், 11.40, மொரப்பூர், 8.50 என, மாவட்டத்தில் மொத்தம், 339.40 மி.மீ., மழையும், சராசரியாக, 37.70 மி.மீ., மழையும் பதிவானது.பாலக்கோட்டில் பெய்த கன மழையால், சுற்றுவட்டார பகுதி-களில் பயிரிடப்பட்டிருந்த முள்ளங்கி, நிலக்கடலை, முட்-டைகோஸ் மற்றும் கீரை வகைகள் உள்ளிட்டவை மழை நீரில் மூழ்கின. * கடத்துார் அடுத்த வீரகவுண்டனுாரை சேர்ந்தவர் ஞானம்மாள். நேற்று முன்தினம் பெய்த கனமழையால், இவரது ஓட்டு வீட்டின் மீது புளியமரம் விழுந்ததில், வீட்டின் பாதியளவு இடிந்து விழுந்-தது. இதேபோன்று அம்பாளபட்டியை சேர்ந்த சாந்தி என்பவரது ஓட்டு வீடும், மோட்டூரை சேர்ந்த சின்னபாப்பா என்பவரின் ஓட்டு வீடும் இடிந்தது.