உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவு பாக்கெட்டில் புழுக்களால் அதிர்ச்சி

மாவு பாக்கெட்டில் புழுக்களால் அதிர்ச்சி

பனமரத்துப்பட்டி, சந்தியூர் ஊராட்சி தாதன்காட்டை சேர்ந்த விவசாயி சந்தோஷ், 40. சந்தியூர் ரேஷன் கடையில் மைதா மாவு பாக்கெட் வாங்கினார். அது தரமற்ற நிலையில் இருந்ததாக புகார் தெரிவித்தார்.இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், ''சந்தியூர் ரேஷன் கடையில், 70 ரூபாய் கொடுத்து இரு மைதா மாவு பாக்கெட் வாங்கினேன். வீட்டுக்கு சென்று பிரித்தபோது வண்டு, புழுக்கள் இருந்தன. அதை கொட்டி விட்டோம். மேலும் வாங்காத பொருட்களை வாங்கியதாக, மொபைல் போனுக்கு குறுந்தகவல் வருகிறது. அதனால் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை