உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1.05 கோடி கேட்டு தாய், மகன் கடத்தல் இருவர் கைது; மற்றொருவருக்கு வலை

ரூ.1.05 கோடி கேட்டு தாய், மகன் கடத்தல் இருவர் கைது; மற்றொருவருக்கு வலை

ஓசூர்: கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, ஆசாத் நகரை சேர்ந்த சேகர் மனைவி தேவி, 55; இவரது மகன் சசிக்குமார், 35, ஆன்லைன் டிரேடிங் ஏஜன்சி நடத்துகிறார். இவர் தனக்கு நன்கு பழக்கமான பர்கூர் அடுத்த பாகிமானுாரை சேர்ந்த திருமால், 48, போடரப்பள்ளி ராஜேந்திரன், 40, மற்றும் முனுசாமி, 35, ஆகிய மூவரிடம் கடந்த, 2021ல், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிகளவு வட்டி கிடைக்கும் என கூறியுள்ளார். அதை நம்பிய அவர்கள் மூவரும், தங்களது பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் பெற்ற கடன் தொகை என மொத்தம், 1.05 கோடி ரூபாயை முதலீடு செய்தனர். சில மாதங்கள் வரை வட்டி கிடைத்தது. 3 பேர் கொடுத்த பணத்தையும் பிட்காயினில் முதலீடு செய்திருந்த சசிக்குமார், ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்தார். கடந்த, 3 ஆண்டுகளாக பணத்தை கேட்டும் கொடுக்காததால் ஆத்திரமடைந்த மூவரும், நேற்று முன்தினம் காலை சசிக்குமாரிடம் பேச வேண்டும் எனக்கூறி, ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்தனர். அங்கு வந்த சசிக்குமார், அவரது தாய் தேவி ஆகியோரை, கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு காரில் கடத்தினர். அப்போது சசிக்குமாரின் தம்பி வசந்தகுமாருக்கு போன் செய்து, 1.05 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என கூறிய வசந்தகுமார், அண்ணன் சசிக்குமார் வங்கி கணக்கிற்கு, ஒரு லட்சம் ரூபாயை அனுப்பினார். அதை அந்த மூவரும் எடுத்துக் கொண்டனர்.மகன் மற்றும் மனைவி கடத்தப்பட்டது குறித்து சேகர், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படையினர் விசாரணையில், பெங்களூருவில் அவர்கள் பதுங்கியிருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், சசிக்குமார் மற்றும் அவரது தாய் தேவியை நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மீட்டனர். இதில் தலைமறைவான, திருமால், ராஜேந்திரனை நேற்று போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார், தலைமறைவான முனுசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ