உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் உண்டியல் உடைப்பு

கோவில் உண்டியல் உடைப்பு

ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்பகனுார் புதுார் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவர் கோவிலை பராமரிக்கிறார். நேற்று, ஆடி பிறப்பையொட்டி கோவிலை சுத்தம் செய்வதற்கு வந்தபோது, கோவில் வெளிப்புற கதவு பூட்டு உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த, 1 கிராம் தாலி திருடப்பட்டிருந்தது. மேலும், உண்டியல் உடைக்கப்பட்டு வெளிப்புற பகுதியில் வீசி செல்லப்பட்டிருந்தது.இந்த உண்டியலில், 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம், காணிக்கை பொருட்கள் இருக்கலாம் என, கோவில் சார்பில், ஆத்துார் ஊரக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ