உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேரட் வரத்து சரிவு கிலோ ரூ.130 ஆனது

கேரட் வரத்து சரிவு கிலோ ரூ.130 ஆனது

தலைவாசல்:சேலம் மாவட்டம், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி கொண்டு வரப்படுகிறது. அதன்படி, ஊட்டி, பெங்களூரு பகுதிகளில் தொடர் மழையால் கேரட் வரத்து தலைவாசல் மார்க்கெட்டுக்கு குறைந்துள்ளது. தினமும், 60 மூட்டை வந்த நிலையில், இரு நாட்களாக, 15 முதல், 20 மூட்டைகள் மட்டும் வரத்து உள்ளது.இதனால் கடந்த வாரம் ஊட்டி கேரட் கிலோ, 80 -- 90 ரூபாய்க்கு விற்ற நிலையில் இரு நாட்களாக, கிலோ, 120 -- 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரு கேரட், கடந்த வாரம், 70 ரூபாய்க்கு விற்ற நிலையில் நேற்று, 90 ரூபாய்க்கு விற்பனையானது. இவை வெளி மார்க்கெட்டில், 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை