உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிரிவலப்பாதையை தார்ச்சாலையாக மாற்ற முடிவு

கிரிவலப்பாதையை தார்ச்சாலையாக மாற்ற முடிவு

பனமரத்துப்பட்டி: மல்லுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தலைவி லதா தலைமை வகித்தார். அதில், சுனைகரடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஆனால் மண் பாதை மேடு பள்ளமாகவும், மழை காலங்களில் சேறு, சகதியாக உள்ளதால் சிரமப்படுகின்றனர். கிரிவலப்பாதையை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றப்படும்; கோவில் வளாகத்தில் மண்டபம் கட்ட, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; மல்லுார் பிரிவில் பாலப்பணியை விரைந்து முடித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் அய்யனார், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை