உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று பல் மருத்துவர்கள் தமிழகத்தில் வேலைநிறுத்தம்

இன்று பல் மருத்துவர்கள் தமிழகத்தில் வேலைநிறுத்தம்

சேலம்: தமிழகத்தில், இன்று பல் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் சுரேந்-திரன், செயலர் செந்தாமரைகண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த, 9 அன்று கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்-லுாரி மருத்துவமனையில், இளம் முதுநிலை பட்டதாரி மாணவி, கொடூரமாக கொல்லப்பட்டார். இதை கண்டித்து, மருத்துவ மாணவர்கள் நடத்திய அமைதி பேரணியில், வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவங்கள், தமிழக பல் மருத்துவ சங்கத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு, எங்களின் கண்டனத்தை தெரி-விக்கும் வகையில், இன்று (ஆக.,17) காலை, 6:00 மணி முதல், நாளை காலை 6:00 மணி வரை, ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.மிக முக்கிய அவசர சேவைகள் தவிர, மற்ற அனைத்து சேவைகளும் அன்று வழங்கப்பட மாட்டாது. மருத்துவ அலுவ-லர்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், எதிர்காலத்தில் இது-போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ