உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

வாழப்பாடி : வாழப்பாடி, மஜ்ரா ஜலகண்டாபுரத்தில், பேளூர் நெடுஞ்சாலை அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி அக்னி குண்டம் விழா நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு அக்னி கரகம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பரண் பூஜை, எருமைக்கிடாவை பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ